விருதுநகரில்  பள்ளி கல்லூரி பேருந்துகள் ஆய்வு

விருதுநகரில் பள்ளி கல்லூரி பேருந்துகள் மாணவ, மாணவிகள் பயணம் செய்யும் வகையில் பாதுகாப்பானதாக உள்ளதா எனவும், அரசு விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பாக சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Updated on
1 min read

விருதுநகரில் பள்ளி கல்லூரி பேருந்துகள் மாணவ, மாணவிகள் பயணம் செய்யும் வகையில் பாதுகாப்பானதாக உள்ளதா எனவும், அரசு விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பாக சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில வாரங்களில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஒவ்வொரு பேருந்திலும் காயம் அடைந்தால் சிகிச்சை செய்வதற்கான முதலுதவி மருத்துவ பெட்டி, ஓட்டுநர் தகுதிக்கான உரிமம் பெற்றுள்ளாரா, பேருந்தில் படிக்கும் தரைக்கும் உள்ள அளவு, தீயணைப்பு கருவிகள், விபத்து மற்றும் அவசர காலங்களில் எளிதாக தப்பும் வகையில் அவசர வழி அமைக்கப்பட்டுள்ளனவா, ஜன்னல் கம்பி வளைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறி்த்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் இருந்து 150 பேருந்துகள் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டன. அதில், 10 பேருந்துகளில் குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாமல் உள்ளன. அதை உடனே சரிசெய்து ஒரு வாரத்திற்குள் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதேபோல், அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்களையும் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என பள்ளி, கல்லூரி நிர்வாகங்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com